நல்லூரடியான் வாசல் . . .





பதினாறு முதல் இருபதுகளின் விளிம்பு வரை நல்லூரடியான் வாசல் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், அரட்டையும் , காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளை ,புதுப்பிக்க, இதில அந்த நல்லூரான் கோயில்படங்களை
பதியிறன் ;;)

நீண்ட புகையிரதப்பாதை


இது கொழும்பில் . . . . வெள்ளவத்தை நீண்ட புகையிரதப்பாதை
இன்றைய தினங்களில் . . . . இப்பாதையூடே நடந்து அப்படியே . .கடற்கரைப்பிள்ளையார் கோவில் வரை போய் வருவதில் ஏதோ சுகம் . . .

இன்றைய யாழ்நகர் !



இது கடந்த சித்திரை மாதம் நான் யாழ்ப்பாணம் போன போது எடுத்தவை . . .
எவடமெண்டு தெரியுதா ?
ஆஸ்பத்திரி வீதி தான் . . .
எப்படி இருந்த இடம் இப்படியாயிற்று :-(

புகைப்படப்போட்டிக்கு அனுப்பிய படங்கள்

நான் எத்தனை புகைப்படம் எடுத்திருதாலும் நெடுந்தீவு சென்ற போது எடுத்த எம் தாயகத்திற்கேயுரித்தான பனைமரத்தை கொண்ட புகைப்படமே எனது முதல் தெரிவு" பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா ?
"இது ஒற்றைப்பனைமரம் தனியே நின்றாலும் எத்தனை கம்பீரம் நம் தமிழனைப்போல !


அடுத்தது எனது சொந்த ஊரான அளவெட்டியில் உள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகே இருந்த செவ்விளநீர் மரம் இவை யாவும் சென்ற வருடம் ஆனி மாதம் படமாக்கப்பட்டவை (ஆவணியுடன் யாழ்ப்பாணத்திற்குரிய சகலபாதைகளும் மூடப்பட்டதை நீங்கள் அறிவீங்க தானே ?)
;)

வணக்கம். .

எந்த விடையத்தையும் தொடங்கும் போதும் இறைவனுக்கு வணக்கம் சொல்வது முறைதானே ? . . . அதற்கமைய முதலில் எனது சொந்த ஊரான அளவெட்டி கும்பளாவளை பிள்ளையாருக்கு ஒரு வணக்கம்
அடுத்து தவளக்கிரி முத்துமாரி ஆம்மனுக்கு ஒரு வணக்கம்
அடுத்து 1990 களின் (அளவையூரிலிருந்து யாழ் வந்தபின் ) இடப்பெயர்வுகளின் பின்னர் இருந்து கொழும்பு வரும்வரை எனக்கு சகலமுமாய் (நல்லது கெட்டது )இருந்த நல்லைக்கந்தனுக்கு இன்னோர் வணக்கம்

இணுவில் பரராஜசெகரப்பிள்ளையார் கோவில்