மதியம் வியாழன், நவம்பர் 15, 2007

கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் கந்தசஷ்டி


கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று சூரன்போர் நடைபெற்றது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில

நன்றி வீரகேசரி

12 பின்னூட்டம்(கள்):

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாயா!
கதிரேசனைத் தரிசிக்க வைத்ததற்கு மிக்க நன்றி!!
"குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்; அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம் வண்டாட்டம்""
ஞாபகம் வந்தது.....
அழகனைக் காணப் பெண்கள் அலையென வந்துள்ளார்கள்.
அனைவருக்கும் நல்லருள் கிட்டட்டும்.

கானா பிரபா said...

பதிவுக்கு மிக்க நன்றி மாயா

மாயா said...

யோகன் அண்ணா, கானா அண்ணா வருகைகளுக்கு நன்றி

என்னதான் என்றாலும் நல்லூரில சூரனைத்தேளில வைச்சுக்கொண்டு காலெல்லாம் கல்லுக்குத்தக்குத்த ஓடுறமாதிரி ஒரு காலம் இனி எப்பதான் வருமோ தெரியாது :(

கதிரேசன்கோவில்லையும் சூரன் வந்தார்தான் ஆனால் ஊரில மாதிர் வேகமில்லை ?

நன்றி

தாசன் said...

"என்னதான் என்றாலும் நல்லூரில சூரனைத்தேளில வைச்சுக்கொண்டு காலெல்லாம் கல்லுக்குத்தக்குத்த ஓடுறமாதிரி ஒரு காலம் இனி எப்பதான் வருமோ தெரியாது''

பதிவுக்கு நன்றிகள். இம் முறையும் நல்லூர் கோவில்லில் சிறப்பாக சூரன் போர் சிறப்பாக நடை பெற்றதாக தகவல் கிடைத்தது.

pudugaithendral said...

kathiresan koiluku arugileye irunthalum maganukku udal nialyai sari illathathal poga miduyatha kurai teernthathu.

nandri

வந்தியத்தேவன் said...

கொழும்பிலே கதிரேசன் கோவிலிலே மட்டும் சூரன் போர் நன்றாக இருக்கிறது. இம்முறை ஒரு மாற்றத்திற்க்காக இன்னொரு கோவிலுக்குப் போனேன் சூரன் சரியான பயந்தாங்கொள்ளியாக எந்த ஆட்டமும் இல்லாமல் சரியான சோம்பலாக போர் செய்தார்.

இதுவரை நல்லூரில் எனக்கு தரிசனம் கிடைக்கவில்லை. நான் பார்த்ததிலையே சிறந்த சூரன் போர் என்றால் அது தொண்டைமானாறு செல்வச் சன்னிதி மற்றும் பொலிகண்டி கந்தசாமி கோவில்தான். எப்படியும் ஒரு இரண்டு மணித்தியாலம் என்றாலும் சூரன் ஆட்டுவார்கள்.

ஒரு சந்தேகம்: ஆண்கள் கந்தசஷ்டி விரதம் பிடிப்பதில்லையா? உங்களின் போட்டோவில் அனைவரும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லை.

Suban said...

முந்தி சின்ன வயசிலே பார்த்தது. ஹும் சூரன் போர் படங்கள் இல்லையா ?

மாயா said...

வாங்க தாசன் வரவகளுக்கு நன்றி
// இம் முறையும் நல்லூர் கோவில்லில் சிறப்பாக சூரன் போர் சிறப்பாக நடை பெற்றதாக தகவல் கிடைத்தது.//
அதுதானே நல்லுரானுக்கு என்ன குறைச்சல் ?

புதுகைதென்ற்ல் நீங்க என்ன Englishல பின்னூட்டம் போடுறியள் தமிழில போடலாமே :(
புதுகைதென்ற்ல் வரவகளுக்கு நன்றி
[மகன் சீக்கரம் குணமாக நாமும் பிரார்த்திப்போம்]

மாயா said...

வந்தியத்தேவன் //ஒரு சந்தேகம்: ஆண்கள் கந்தசஷ்டி விரதம் பிடிப்பதில்லையா? //
ஆண்கள் கந்தசஷ்டி விரதம் பிடிக்கிறவங்க தானே ?

//உங்களின் போட்டோவில் அனைவரும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.//அது தான் யொகன் அண்ணா சொல்லுறார்
//"குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்; அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம் வண்டாட்டம்""
ஞாபகம் வந்தது.....
அழகனைக் காணப் பெண்கள் அலையென வந்துள்ளார்கள்.//

அது சரி நீங்க எந்தக்கோவிலக்குப்போனீர்கள் :(

மாயா said...

//சூரன் போர் படங்கள் இல்லையா ?//
Sorry Suban :-/ படங்கள் கிடைக்கேல்ல

அதுக்காக "தாவணிபோட்ட தீபாவளியையும்" "சுடிதார் போட்ட சொர்க்கங்களையும்"
தரிசனம் செய்ததாக நினைக்கக்கூடாது கண்டியளே ;)

pudugaithendral said...

வணக்கம் மாயா,
தமிழில் தட்டச்ச இபோது தான் பழகுகிறேன். இனி தமிழில் பின்னூட்டம் இடுவேன். (பிளாக் ஆரம்பித்துவிட்டேனே)

பிரார்த்தனைக்கு நன்றி. மகன் குணமாகி விட்டான்.

மாயா said...

வருகைக்கு நன்றி தொடர்ந்தும் எழுதுங்கள் :)