மதியம் வியாழன், ஆகஸ்ட் 28, 2008

நல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]

இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான [ கைகலாசவாகனம் , சப்பரம் ] புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்



இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்

நல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள்

இங்கு இதுவரை நடைபெற்ற நல்லைக்கந்தன் உற்சவ கால நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்களை இங்கே தரவேற்றுகிறேன்



இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் நிஷாந்தனுக்கு நன்றிகள்

மதியம் சனி, ஆகஸ்ட் 16, 2008

நல்லூர் கந்தன் மஞ்சம் - புகைப்படங்கள்


மதியம் வியாழன், ஆகஸ்ட் 7, 2008

நல்லைக்கந்தன் 1ம்திருவிழா புகைப்படங்கள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது .

ஆலயப் பெருந்திருவிழா நேற்று ஆரம்ப மானதையிட்டு அதிகாலை 4.30 மணிக்கே பக்தர்கள் ஆலயத்தில் பெருமளவில் கூடி யிருந்தனர்.பெருமளவான பக்தர்கள் பிரதட்டை அடித்தும் அடி அழித்தும் தமது நேர்த்திக் கடன்களைச்செய்தனார் கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஆலய உள்வீதியில் சுவாமி வீதியுலா இடம்பெற்றது. உள்வீதியில் பெரும் நெரிசல் காணப்பட்டது.அதுதொடர்பான புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு . . .


நன்றி : உதயன்

மதியம் வெள்ளி, ஜனவரி 25, 2008

Free Software Foundation தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் ஸ்டால்மன் [ RMS ] இலங்கை வருகை தொடர்பான புகைப்படத்தொகுப்பு

கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் அமையம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன. க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே.

அவரது விஜயத்தின் போது SLIIT விஜயமும் ஓர் அங்கமாக அமைந்தது . அந்தவகையில் கொழும்பிலிருந்து ஏறத்தாள 20km கண்டியை நோக்கி அமைந்திருக்கும் மாலபே நகரில் அமைந்திருக்கும் SLIIT வளாகத்தில் "அறத்திலும் நடைமுறையிலும் கட்டற்ற மென்பொருள் "என்ற தலைப்பில் உரையாற்றினார் அவை தொடர்பான புகைப்படங்கள் உங்களுக்காக


இது பற்றி மேலதிகமாக மயூரன் உடைய வலைப்பூவில் . . . .