நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது .
ஆலயப் பெருந்திருவிழா நேற்று ஆரம்ப மானதையிட்டு அதிகாலை 4.30 மணிக்கே பக்தர்கள் ஆலயத்தில் பெருமளவில் கூடி யிருந்தனர்.பெருமளவான பக்தர்கள் பிரதட்டை அடித்தும் அடி அழித்தும் தமது நேர்த்திக் கடன்களைச்செய்தனார் கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஆலய உள்வீதியில் சுவாமி வீதியுலா இடம்பெற்றது. உள்வீதியில் பெரும் நெரிசல் காணப்பட்டது.அதுதொடர்பான புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு . . .


4 பின்னூட்டம்(கள்):
அகத்திலே......... நல்லூரை நேரிலே தரிசித்த உணர்வு.
நல்லூரைப் பற்றிய தகவல் என்றவுடன் மயுரனைப் பாராமல் மாயாவுக்கு எழுதிவிட்டேன். பரவாயில்லை. இருவருமே ஒன்றுதானே!
3 நாட்களுக்கு முன் என்று நினைக்கின்றேன். வேலைப்பழு காரணமாக முழவதும் பார்வையிடவில்லை. யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளையும் அவரது குருவாகிய செல்லப்பா சுவாமிகளையும் பற்றிய தகவல் ஒன்று வெளிவந்தது.
தயவுசெய்து அக் கட்டுரையை நான் முழவதும் வாசிக்க விரும்புகிறேன். உதவ முடியுமா?
மாயாவின் இந்தக் கைங்கரியத்தை மனதார வாழ்த்துகிறேன். உதயன் பத்திரிகையிலிருந்து செய்தியையும் படங்களையும் பிரசுரித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
சுவிற்சலாந்தில் இருக்கும் அடியேனுக்கு இவை பெரிய வரப்பிரசாதம். மிகமிக நன்றிகள்.
தங்களின் பணி சிறக்கட்டும்.
தங்கமுகுந்தன் மற்றும் சிவத்தமிழோன் ஆகியோரின் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி . . .
தங்கமுகுந்தன் ஐயா ! யோகர்சுவாமிகள் பற்றியும் செல்லப்பாசுவாமிகள் பற்றியும் நான் எங்காவது கண்ணுற்றால் உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்
நன்றி
Post a Comment