கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் அமையம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் அவர்கள் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன. க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே.
அவரது விஜயத்தின் போது SLIIT விஜயமும் ஓர் அங்கமாக அமைந்தது . அந்தவகையில் கொழும்பிலிருந்து ஏறத்தாள 20km கண்டியை நோக்கி அமைந்திருக்கும் மாலபே நகரில் அமைந்திருக்கும் SLIIT வளாகத்தில் "அறத்திலும் நடைமுறையிலும் கட்டற்ற மென்பொருள் "என்ற தலைப்பில் உரையாற்றினார் அவை தொடர்பான புகைப்படங்கள் உங்களுக்காக
இது பற்றி மேலதிகமாக மயூரன் உடைய வலைப்பூவில் . . . .
Free Software Foundation தோற்றுவிப்பாளர் ரிச்சர்ட் ஸ்டால்மன் [ RMS ] இலங்கை வருகை தொடர்பான புகைப்படத்தொகுப்பு
வகைகள் நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டம்(கள்):
மயூரனின் வலைப்பக்கத்தில் நிறைய தகவல் அறிந்தேன். படங்களுக்கு நன்றி மாயா.
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the GPS, I hope you enjoy. The address is http://gps-brasil.blogspot.com. A hug.
Post a Comment