அளவையூர் தந்த சில கலைஞர்களின் புகைப்படங்கள்

என். கே. பத்மநாதன் :-
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தின் நாதசுர இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர் சின்னப் பெடியனாக இருந்த போது என் ஊரில் உள்ள பி்ளையார் , அம்மன் ஆலயங்களில் இவரின் நாத வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன் பின்பு இடம்பெயர்ந்து யாழ் வந்தபின்பிலிருந்து அவர் காலமாகும்வரை நல்லூல் கந்தசுவாமி கோவில் திருவிழாக்காலங்களில் நாத வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன் அன்னாரின் இரு வெவ்வேறு காலகட்டப்படங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. . .

மஹாகவி
தமிழ்க் கவிதையின் அடையாளமாகிய பேச்சோசையை முதன்மைப்படுத்தியவர் என்ற வகையிலும், பாநாடகம் வில்லுப்பாட்டு ஆகிய துறைகளிலும் தம்முத்திரையைப் பொறித்த சாதனையாளர் என்ற வகையிலும் மஹாகவி வகிக்கும் இடம் முக்கியமானது.

அடுத்து அளவெட்டி தெட்சணாமூர்த்தி
இணுவிலில் பிறந்தாலும் வளாத்தெடுத்தது அளவையூர்தான் ! இவரின் நாதவெள்ளத்தைக்கேட்க நான் கொடுத்துவைக்கவில்லை . . . . எனினும் எனக்கு மூத்தோர் சொல்லக்கேட்டிருக்கிறேன் . . . அண்மையில் தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் தேர் நிர்மாணிக்கப்பட்டபோது இவரின் சிற்ப்பமொன்றும் பீடத்தில் பொறிக்கப்பட்டது



இப்புகைப்படங்களை அருணோதயாக்கல்லூரி கனடா கிளையினரால் வெளியிடப்பட்ட " பூச்சொரியும் பொன்னொச்சிமரம் " எனும் புத்தகத்திலிருந்து பெற்றேன்

10 பின்னூட்டம்(கள்):

said...

படங்களுக்கு மிக்க நன்றி மாயா.

மஹாகவி, மற்றும் தெட்சனாமூர்த்தி போன்றோர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. நான் பிறக்க முன்னரே அவர்கள் இறந்து விட்டார்கள்.

பத்மநாதன்...ம்ம்ம்... மறக்க முடியுமா? நெற்றியில் திருநீற்றுப் பூச்சுடன் அங்காலும் இங்காலும் உடலைச் சாய்த்து காலால் தாளம் போட்டு, தலையை ஆட்டி வாசிக்கும் போது அவரின் நாதஸ்வரத்தை மட்டுமல்ல அவரின் உடலசைவுகளையே பல தடவைகள் இரசித்திருக்கிறேன்.

ஈழ மண் பெற்றெடுத்த அற்புதக் கலைஞர்களில் பத்மநாதனுக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு.

முந்தி பாடசாலைக்குச் செல்லும் போது அவர் வீட்டைத் தாண்டித்தான் ஒவ்வொரு நாளும் செல்வேன்.

said...

nanru

said...

நல்லாயிருக்கு. நன்றி

said...

வெற்றி,கானா பிரபா,பகீ . .

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

அன்னார்[பத்மநாதன்] காலமாகும் வரை அவரின் இசையைப்பருக வாய்ப்புக்கொடுத்த இறைவனுக்கு நன்றிகள்

வெற்றி உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அளவெட்டியில் எங்கே இருந்தீர்களென தெரிந்நு கொள்ளலாமா?

said...

வித்துவான் பத்மநாதனின், நல்லைக் கந்தனுக்கு இசைமுழுக்குச் செய்யும் வாசிப்பு என் இசைஆர்வத்துக்கு தூண்டுகோல், தெட்சணாமூர்த்தியின் கச்சேரியும்,அவருக்கு இருந்த மரியாதையும் நேரே சிறுவனாகக் கண்டவன்.
மகாகவியின் சில கவிதைகள் படித்துள்ளேன். ஈழக்கவியுலகில் போற்றப்படுபவர்.
படங்களுக்கு நன்றி!

said...

நல்லாயிருக்கு நன்றி

said...

யோகன் பாரிஸ் , சின்னக்குட்டி வருகை தந்தமைக்கு

மிக்க மகிழ்க்சி . . .

said...

மாயா,

/* வெற்றி உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் அளவெட்டியில் எங்கே இருந்தீர்களென தெரிந்நு கொள்ளலாமா? */

அளவெட்டி என் சொந்த ஊர் அல்ல. எனது ஊர் மாதகல். நான் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் படித்ததால் அளவெட்டியூடாகத்தான் பாடசாலைக்குச் செல்வது வழக்கம்.

அத்துடன் மகாஜனாவில் படித்ததனால் அளவெட்டியிலும் எனக்குப் பல நண்பர்கள் இருந்ந்தார்கள்.

குறிப்பாக அளவெட்டிக் கும்பிளாவளைப் பிள்ளையார் ஆலயப் பகுதிகள் எல்லாம் நாம் விளையாடித் திரிந்த இடங்கள்.

said...
This comment has been removed by the author.
said...

மிக்க நன்றி அண்ணா . . .