Showing posts with label கலைஞர்கள். Show all posts
Showing posts with label கலைஞர்கள். Show all posts

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் புகைப்படங்கள்

சில்லாலை, யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராஜன் எனச் சூடிக்கொண்டார். அன்னாரது இருபுகைப்படங்களையும் அன்னார் துயில்கொள்ளும் சமாதியின் புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்கிறேன்





அளவையூர் தந்த சில கலைஞர்களின் புகைப்படங்கள்

என். கே. பத்மநாதன் :-
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தின் நாதசுர இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சியவர் சின்னப் பெடியனாக இருந்த போது என் ஊரில் உள்ள பி்ளையார் , அம்மன் ஆலயங்களில் இவரின் நாத வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன் பின்பு இடம்பெயர்ந்து யாழ் வந்தபின்பிலிருந்து அவர் காலமாகும்வரை நல்லூல் கந்தசுவாமி கோவில் திருவிழாக்காலங்களில் நாத வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறேன் அன்னாரின் இரு வெவ்வேறு காலகட்டப்படங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. . .

மஹாகவி
தமிழ்க் கவிதையின் அடையாளமாகிய பேச்சோசையை முதன்மைப்படுத்தியவர் என்ற வகையிலும், பாநாடகம் வில்லுப்பாட்டு ஆகிய துறைகளிலும் தம்முத்திரையைப் பொறித்த சாதனையாளர் என்ற வகையிலும் மஹாகவி வகிக்கும் இடம் முக்கியமானது.

அடுத்து அளவெட்டி தெட்சணாமூர்த்தி
இணுவிலில் பிறந்தாலும் வளாத்தெடுத்தது அளவையூர்தான் ! இவரின் நாதவெள்ளத்தைக்கேட்க நான் கொடுத்துவைக்கவில்லை . . . . எனினும் எனக்கு மூத்தோர் சொல்லக்கேட்டிருக்கிறேன் . . . அண்மையில் தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில் தேர் நிர்மாணிக்கப்பட்டபோது இவரின் சிற்ப்பமொன்றும் பீடத்தில் பொறிக்கப்பட்டது



இப்புகைப்படங்களை அருணோதயாக்கல்லூரி கனடா கிளையினரால் வெளியிடப்பட்ட " பூச்சொரியும் பொன்னொச்சிமரம் " எனும் புத்தகத்திலிருந்து பெற்றேன்