சூர்யா & அசின் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் [ Remix ]

நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திரைப்பாடல்களக்கு Remix செய்வதுண்டு அந்த (வெட்டி)வேலையை தலைநகர் வந்தபின் நிறுத்தியிருந்தேன். ஆனால் ஆடியகாலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அதுபோல் மீண்டும் திரைப்பாடல்களக்கு ரீமிக்ஸ் செய்துவருகிறேன் அவ்வாறு Remix செய்த பாடலொன்று தான். இது சூர்யாவும் அசினும் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடல்களில் இதுவும் ஒன்று கவனமாகக்கவனித்தீர்களாயின் பாட்டின் அரைவாசியிலிருந்து தமிழில் பாடல் தொடர்வதைக்கேட்கலாம் . (சிங்களப்பாடல்களின் இடையே தமிழ்வரிகளை இணைப்பது சிங்களக்கலைஞர்களின் இப்போதைய Fashion )


சரி இனி பாடலைப்பர்த்து,கேட்டு ரசியுங்கள் என் Remixஐப்பற்றி பினனூட்டமொன்றைப்போட்டுவிடுங்களேன் . . . .


12 பின்னூட்டம்(கள்):

said...

பாராட்டுக்கள் மாயா. அருமையா இருக்கின்றது. எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். சிம்பிளான இசை மற்றும் வரிகள்.

said...

வருகைக்கு நன்றி :)

நிச்சயமாக அந்த சிங்களக்கலைஞர்(சங்கீத்) பாராட்டப்படவேண்டியவர்

said...

கலக்கலான ரீமிக்ஸ் மாயா. பாராட்டுக்கள்.

// இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடல்களில் இதுவும் ஒன்று கவனமாகக்கவனித்தீர்களாயின் பாட்டின் அரைவாசியிலிருந்து தமிழில் பாடல் தொடர்வதைக்கேட்கலாம் . //

சிங்களவர்களென்றால் இனவெறி பிடித்தவர்கள் என்று தான் தெரியும். அவர்களிலும்
சில மாடரேட்கள் இருக்கிறார்களா? பரவாயில்லை.

said...

வருகைக்கு நன்றி :)

// சிங்களவர்களென்றால் இனவெறி பிடித்தவர்கள் என்று தான் தெரியும். அவர்களிலும் //

நண்பரே சிங்களவர்களென்றால் இனவெறி பிடித்தவர்கள் என்று அர்த்தமில்லை அப்படி நினைத்திருந்தால் அந்தக்கொள்கையை மாற்றிக்கொள்ளுங்கள். ஓரு சிலரின் தவறான காட்டுதலால் சிலர் இனவெறி பிடித்தவர்களாக மாறியிருப்பார்கள் ( அரசியலில் தான் )தயவுசெய்து விளங்கிக்கோள்ளும் அதற்காக சிங்களவர்களென்றால் இனவெறி பிடித்தவர்கள் என்று அர்த்தமில்லை

நீங்க நினைக்கிறமாதிரி இன்றய சந்ததியினர் துவேசம் காட்டுறதில்லை . .
இது நான் கண்ட அனுபவம் :)

said...

//நீங்க நினைக்கிறமாதிரி இன்றய சந்ததியினர் துவேசம் காட்டுறதில்லை . .
இது நான் கண்ட அனுபவம் :)//

மிகவும் தவறு
என்னுடன் வேலை செய்பவர்கள் அனைவரும் இளைஞர்களே அவ்ர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் பயங்கரத் துவேஷிகள். அவர்களுக்கு எத்தனை தடவை எம் பிரச்சனையை புரிய வைத்தாலும் புரியாது காரணம் அவர்கள் இன்னமும் மஹாவம்ச மனப்பான்மையில் இருந்து மாறவில்லை. பலர் ஜேபிவி ஹெல உறுமய உறுப்பினர்கள். இன்றைய சிங்கள இளைஞர்கள் பலர் தவறான வழிகாட்டலினால் தடம் மாறிப்ப்போகிறார்கள் அவர்களுக்கு நீங்கள் மேலே இட்ட சங்கீத் பாத்தியா சந்தூஷ் இராஜ் போன்றவர்களைப் பிடிக்காது அவர்கள் தம் கலாச்சாரத்தை(?) சிதைக்கிறார்களாம்.

said...

நீங்கள் நிலைமை புரிந்தவர் என்பதால் சற்று ஒத்துப்போகிறேன் . . .

தடம் மாற முக்கிய காரணம் மூத்தவர்கள் தான் இல்லையா. .

//நீங்கள் மேலே இட்ட சங்கீத் பாத்தியா சந்தூஷ் இராஜ் போன்றவர்களைப் பிடிக்காது //

இதை நான் ஒத்துக்கொள்கிறேன் ஏனெனில் பழமைவாதிகளுக்கு புதிதாக ஏதாவது செய்தால் பிடிக்காது தானே !

(இந்த கெட்டபழக்கம் சிங்களவர்களிடம் மட்டும்இன்றி ஏனையோரிடத்திலும் உண்டு)

said...

உண்மையில் நான் பார்த்த வகையில் சில சிங்களப் பெண்கள் கூட பயங்கர துவேஷம் பிடித்தவர்கள் காரணம் தமிழன் தம்மை விட முன்னேறிவிடுவான் என்ற பயம் தான் .

said...

பலர் துவேஷிகள் என்பதை நானும் அனுபவத்தினூடு கண்டுள்ளேன். அவர்களுடன் அரசியல் கதைக்காதவரை அது தெரியாது.. கதைத்துப் பாருங்கள் புரியும்..

இதுவரை நான் கண்டவர்களில் ஒரே ஒருவரைத் தவிர (என் நெருங்கிய முஸ்லிம் நண்பியும் மலையகத்து நண்பனும், எம் பிரச்சினையை அறிந்து கொண்டதை விட நன்றாகவே அறிந்து கொண்ட என் தோழி)மிகுதிப் பெரும்பான்மைச் சிங்களவர் தமிழர் தங்களின் நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணமே கொண்டுள்ளனர்.. அதன் காரணமாக துவேஷம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்..

அவர்கள் அவ்வாறு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர்..
அவர்களைச் சொல்லித் தப்பில்லை..

பாடல் மீள் தயாரிப்பு நன்று.. சிங்களப் பாடல் என் பெரு விருப்புக்குரிய பாடல்களில் ஒன்று.:)

said...

ஆகா . . . எல்லோருக்கும் ஒரு Sorry :((

ஆர்வத்தில எழுதீட்டன் போல கிடக்கு இதுபற்றி பிறகு விவாதிப்போம் . . .

மற்றும்படி வருகைக்கு
நன்றி

said...

நண்பர்களே வணக்கம்

இப்போது பாடலை தரவிறக்கவும் முடியும்

நன்றி

said...

maya leave the politics. who wrote the song in both langauages? one poet? nice one !

said...

OSAI Chella வருகைக்கு நன்றி :)

அண்ணா நான் அரசிலலை இழுக்கேல்ல . . . .

சரி விடுவம் இந்தப்பாடலை சிங்களக்கலைஞரே எழுதினார் [தமிழ் கலைஞர்களின் உதவியுடன் தான்]

இன்னுமொன்று
இங்கே இலங்கையில் சிங்கள தமிழ் கலைஞர்களிடையே நல்ல Understanding உள்ளது :)

இனிவரும் காலங்களிலும் இவ்வாறான பாடல்களை தரவேற்றுவேன்

நன்றி