புகைப்படப்போட்டிக்கு அனுப்பிய படங்கள்

நான் எத்தனை புகைப்படம் எடுத்திருதாலும் நெடுந்தீவு சென்ற போது எடுத்த எம் தாயகத்திற்கேயுரித்தான பனைமரத்தை கொண்ட புகைப்படமே எனது முதல் தெரிவு" பனைமரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா ?
"இது ஒற்றைப்பனைமரம் தனியே நின்றாலும் எத்தனை கம்பீரம் நம் தமிழனைப்போல !


அடுத்தது எனது சொந்த ஊரான அளவெட்டியில் உள்ள தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் அருகே இருந்த செவ்விளநீர் மரம் இவை யாவும் சென்ற வருடம் ஆனி மாதம் படமாக்கப்பட்டவை (ஆவணியுடன் யாழ்ப்பாணத்திற்குரிய சகலபாதைகளும் மூடப்பட்டதை நீங்கள் அறிவீங்க தானே ?)
;)

0 பின்னூட்டம்(கள்):