மதியம் புதன், டிசம்பர் 5, 2007

கவிப்பேரரசு வைரமுத்துவாக நகைச்சுவை மன்னன் விவேக் :)

மதியம் செவ்வாய், டிசம்பர் 4, 2007

நெடுந்தீவு நினைவுகள்

நெடுந்தீவு இறங்குதுறை
குமுதினிப்படகில் இறந்தவர்களின் பட்டியல்






மதியம் வியாழன், நவம்பர் 22, 2007

கவிதைகள் ஓவியங்களாக . . .







Cupid Blings

ஓவியங்களும் கவிதைகளும் சேர்ந்த ஆக்கங்கள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் [படத்தின்மேல் சொடுக்கினால் பெரிதாகும்]

பதிவர்களே இங்கு சில கருத்துக்களை கூறிவிடுகிறேன்
* இங்குள்ள கவிதைவரிகள் யாவம் என்னுடையவை அல்ல ஆனால் பர்வைக்குவைத்த ஆக்கங்கள் யாவும் என்னுடையவை . எவரும் தயவுசெய்து உரிமை கொண்டாட வேண்டாம் ஆனால் இஙகுள்ள படங்களை நீங்கள் எந்தவிதமாற்றங்களுமின்றி வேறு இடங்களில் பயன்படுத்துவதையிட்டு எனக்கு எந்தவித கவலையுமில்லை
நன்றி [ எல்லாம் அண்மையில் என் தனிப்பட்ட Mailக்கு வந்த மினன்னஞசல்கள் தான் ]

மதியம் வியாழன், நவம்பர் 15, 2007

கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் கந்தசஷ்டி


கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று சூரன்போர் நடைபெற்றது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில

நன்றி வீரகேசரி

மதியம் வெள்ளி, அக்டோபர் 19, 2007

அழகிய சொர்க்கம் - இலங்கை -

" இப்பிடியொரு அழகான இடம் உலகத்தில் வேறு இருக்குமா தெரியவில்லை ,
அப்படியிருந்தாலும் தெரிந்து கொள்வதில் விருப்பமில்லை
"

காக்க காக்க
இலங்கையின் எழில் கொஞ்சும் மலையகத்தின் " சீதாஎலிய " மற்றும் அதனை சூழ உள்ள பிரதேசங்களின் அரிய புகைப்படங்கள்


















மதியம் வெள்ளி, அக்டோபர் 12, 2007

நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . . . . [ இலங்கைக்கலைஞர்களின் இனிய கண்ணொளி ]

" நம் ஊரை மறந்து போய் பட்டணம் ஓடிப்போனால் . .
இந்த ஊரு அருமையெல்லாம் யார் உனக்கு சொல்லித்தருவார் ?
மண்வாசனை அருமையெல்லாம் உன்னை விட்டு விலகிப்போச்சா ?
உன்கூட எப்பவும் இருக்கும் இந்தஊரின் வாசனை தான் ! "
அருமையான பாடல்வரிகள் இப்போதைய தலைமுறையினருக்கு தோவையான வரிகள் அவற்றை அவர்கள் பாணியில் கொடுத்துள்ளனர்


இலங்கையின் இளையதலைமுறை கலைஞர்களின் (சிங்கள,தமிழ்) கைவண்ணம் .
பாடகர்கள் பெயர் கஜன் மற்றும் டினேஸ்
இசை பாடல்வரிகள் காட்சிக்கலப்பு Graphics என அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது

இவர்கள் ஆக்கி வெளியிட்ட இந்த பாடல் மூலமாக கணிசமானஅளவில் சிங்கள தமிழ் இரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டனர் .

மதியம் வெள்ளி, செப்டம்பர் 28, 2007

Google இன் இடைமுகங்கள் சில உங்கள் பார்வைக்கு

இணைய உலகின் சக்கரவர்த்தியாக இருந்து வருகின்ற கூகிள் தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடியது. கூகிள் என்கின்ற டொமைன் 1997 இல் பதியப்பட்டிருந்தாலும் அது இணையப்பக்கமாக செயற்படத்தொடங்கியது 1998 செப்ரெம்பரிலேயே. கூகிள் 1998 இல் அன்று தொடக்கம் இன்றுவரை என்னால் இயன்றவரை தேடிப்பெற்ற Google ! இன் இடைமுகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .

படத்தை முழுவதும் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்






















தேடிப்பெற்ற தேடலுக்கு உதவிய காண்டிபனுக்கு Thanks !

மதியம் வியாழன், செப்டம்பர் 20, 2007

சூர்யா & அசின் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் [ Remix ]

நான் யாழ்ப்பாணத்திலிருந்த காலத்தில் திரைப்பாடல்களக்கு Remix செய்வதுண்டு அந்த (வெட்டி)வேலையை தலைநகர் வந்தபின் நிறுத்தியிருந்தேன். ஆனால் ஆடியகாலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்பார்களே அதுபோல் மீண்டும் திரைப்பாடல்களக்கு ரீமிக்ஸ் செய்துவருகிறேன் அவ்வாறு Remix செய்த பாடலொன்று தான். இது சூர்யாவும் அசினும் சிங்களப்பாடலொன்றுக்கு நடனமாடுகின்றனர் இலங்கையில் பிரபலமான சிங்களப்பாடல்களில் இதுவும் ஒன்று கவனமாகக்கவனித்தீர்களாயின் பாட்டின் அரைவாசியிலிருந்து தமிழில் பாடல் தொடர்வதைக்கேட்கலாம் . (சிங்களப்பாடல்களின் இடையே தமிழ்வரிகளை இணைப்பது சிங்களக்கலைஞர்களின் இப்போதைய Fashion )


சரி இனி பாடலைப்பர்த்து,கேட்டு ரசியுங்கள் என் Remixஐப்பற்றி பினனூட்டமொன்றைப்போட்டுவிடுங்களேன் . . . .


மதியம் செவ்வாய், செப்டம்பர் 18, 2007

Martin Luther King Jr. - SPEECH (Video)

வணக்கம் நண்பர்களே !
ஏற்கனவே புகைபடங்கள் மூலம் உங்களை வந்தடைந்து கொண்டிருந்த நான் எடுத்திருக்கும் அடுத்த முயற்சி இது. ஒளிப்படக்காட்சிகளுக்காக தனியே ஓர் Blog தொடங்காமல் இவ்வலைப்பூவிலே இனிமேல் இடையிடையே வீடியோக்காட்சிகளையும் உங்களிடையே பகிரப்போகிறேன் . . கண் குளிரப் பார்த்து ரசியுங்கள் . . .
(இதுபற்றி மேலதிக கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்)

முதலாவதாக எனக்கு மிகவும் பிடித்த அஹிம்சா போராட்டத்தின் மாபெரும் சக்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய பிரபலமான "எனக்கொரு கனவுண்டு” (I have a dream ) சொற்பொழிவின் சிறுதுளி (வாஷிங்டன் பேரணி நிகழ்ந்து )

* நான் படிக்கும் இடத்தில் YouTube , MEGAVIDEO எல்லாம் தடை அதனால் Yahoo ! Video மூலம் பகிர்கிறேன் வீடியோக்காட்சிகளைப்பர்க்கும்போது FireFox பயன்படுத்தினால் நான் சந்தோசப்படுவேன் . . .
* கானாஅண்ணையும் வீடியேஸ்பதி எண்டு தொடங்கீட்டார்

மதியம் திங்கள், செப்டம்பர் 10, 2007

நல்லூர் தேர்த்திருவிழா படங்கள்

இன்று காலை நடைபெற்ற நல்லைக்கந்தன் தேர்உற்சவப்படங்கள் வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகக் கடவுள் இன்று காலை ஏழு மணியளவில் வெளிவீதி வலம் வந்து ரதமேறித் தம் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்தார்.







இப்படங்களை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பிய நண்பன் திருச்செந்தூரனுக்கு நன்றிகள்