மதியம் புதன், ஆகஸ்ட் 29, 2007

இலங்கை றம்பொடை குறிஞ்சிக்குமரன் ஆலயம்

அண்மையில் எனது நண்பரொருவர் றம்பொடை குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இக்கோவில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் றம்பொடை எனும் இடத்தில் உள்ளது









இக்கோவில் இந்தியத்திரைப்படமோன்றிலும் இடம்பெற்றுள்ளது அதாவது நகுலன் போன்னுச்சாமி இயக்கிய வர்ணஜாலம் என்ற திரைப்படத்தில் இக்கோவில் அடிக்கடி காட்டப்படுகின்றது
நன்றி நிர்மலன் மற்றும் டினோஜன்

மதியம் திங்கள், ஆகஸ்ட் 27, 2007

நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 3 ]

இன்று 10ம் திருவிழா அதாவது மஞ்சத்திருவிழா ! மஞசப்படம் ஒன்றும் கிடைக்கேல்ல . . . கடந்த பதிவில் நல்லுர் பற்றின பழைய படங்களைப்பதிந்த நான் இன்று நல்லூர் சுற்றாடல் படங்களைப்பதியுறன் திருவிழாக்க்காலங்களில் நல்லூர் எப்படியெல்லாம் களைகட்டுமெனப்பாருங்கோ இதல்லாம் 2005ம் ஆண்டு எடுத்தபடங்கள் இப்ப நிலமை எப்படியோ யாருக்குத்தெரியும் . . . .

சரி சரி படங்களைப்பார்ப்பமா ? ?


இது அரசடிச்சந்தியில் கம்பீரமாக நிற்கும் பாரதியார் . . . .


சப்பறம் கட்டும்வேலை நடக்குது தெரியுதா ? ?


பஜனை செய்யும் அடியார்கள்

திருகணி,சுளகு கடகம் விற்பனை

விளையாட்டுப்போருட்களுக்கான கடை

காரஞ்சுண்டல்

கடலைக்கடை

முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன்சிலை . . .


சுற்றிப்பார்த்துக்களைப்பாயிருப்பீங்க வாங்க ஐஸ்கிறீம் கடைக்குப்போவம் லிங்கம் கூல் பார் (இப்ப லிங்கன் என்டு பெயர் மாற்றினாலும் கடைபெயற்பலகையிலிருப்பதோ லிங்கம் என்டு தான்)
சரி சரி நேரமாயிடுச்சு போலதெரியுது வீட்ட போவமா ? ?
நல்லுர் படம் போடவில்லை எண்டு கோவிக்காதேங்கோ . . . .

மதியம் வெள்ளி, ஆகஸ்ட் 24, 2007

நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 2 ]

இன்று சனிக்கிழமை 8ம் திருவிழா ! போனபதிவில நல்லுர்ப்படங்களை பதிவேற்றிய நான் இன்றய பதிவில நல்லுர் பற்றின பழைய படங்களைப்பதியுறன் பாருங்கோ எப்படியிருந்த நல்லுர் எப்படியெல்லாம் மாறி இப்ப எவ்வளவு பிரமாண்டமாயிருக்கு பாருங்கோ . . .
இது இரண்டாவது தொகுதி படங்கள்

இது பழைய நல்லூர் ( ஏற்கனவே காண்டடீபன் போட்டிருந்தார் )


இன்னொரு பார்வையில் நல்லுர் [படத்தை வழமைபோல் பெரிதாக்கிப்பார்க்க வெளிக்கிடாதேங்கோ படம் தெளிவு குறைந்துவிடும்]

இது கெஞசம் பெரிதாக்கப்பட்டபின்பு (தெற்கு வாசல் தெரியுதா ? ) அந்தக்காலத்தில பருத்தித்துறைவீதி தான் தெற்கு வாசல்


இது பிறிதோரு காலத்தில்



இது இப்போதுள்ள நல்லுர்


மதியம் வியாழன், ஆகஸ்ட் 23, 2007

நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 1 ]

நல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது

வருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் 12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.

கானாபிரபா அண்ணா 25 நாளும் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பைப்பற்றி எழுத ஆரம்பித்து முருகன் அருளால் நன்றாகப்போகுது இதே நேரத்தில் கடந்த இரண்டு வருடங்களின்முன் நடைபெற்ற திருவிழாப்படங்கள் கொஞ்சம் என்னட்டக்கிடக்கு அவற்றை இத்திருவிழா நடைபெறும் காலங்களில் பதிவேற்றலாமென எண்ணியுள்ளேன் கனநேரம் கதைச்சிட்டம் போல கிடக்கு அப்ப கோவிலுக்குப்போவமா

இது முதல்தொகுதி படங்கள்
இவையாவும் 2005ம் ஆண்டு திருவிழாவில் எடுக்கப்பட்டவை






மதியம் திங்கள், ஆகஸ்ட் 20, 2007

இலங்கை கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி

கடந்த சனிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி இடம்பெற்றது இரதபவனியைத்தொடர்ந்து கற்பூரச்சட்டி எடுப்போர்,காவடி எடுப்போர் மற்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அணிவகுத்துச்சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது அது தொடர்பான புகைப்படங்களை இங்கே தருகிறேன்