இன்று 10ம் திருவிழா அதாவது மஞ்சத்திருவிழா ! மஞசப்படம் ஒன்றும் கிடைக்கேல்ல . . . கடந்த பதிவில் நல்லுர் பற்றின பழைய படங்களைப்பதிந்த நான் இன்று நல்லூர் சுற்றாடல் படங்களைப்பதியுறன் திருவிழாக்க்காலங்களில் நல்லூர் எப்படியெல்லாம் களைகட்டுமெனப்பாருங்கோ இதல்லாம் 2005ம் ஆண்டு எடுத்தபடங்கள் இப்ப நிலமை எப்படியோ யாருக்குத்தெரியும் . . . .
சரி சரி படங்களைப்பார்ப்பமா ? ?
இது அரசடிச்சந்தியில் கம்பீரமாக நிற்கும் பாரதியார் . . . . 
சப்பறம் கட்டும்வேலை நடக்குது தெரியுதா ? ?

பஜனை செய்யும் அடியார்கள்
திருகணி,சுளகு கடகம் விற்பனை
விளையாட்டுப்போருட்களுக்கான கடை
காரஞ்சுண்டல்
கடலைக்கடை
முத்திரைச்சந்தியிலுள்ள சங்கிலியன்சிலை . . .

சுற்றிப்பார்த்துக்களைப்பாயிருப்பீங்க வாங்க ஐஸ்கிறீம் கடைக்குப்போவம் லிங்கம் கூல் பார் (இப்ப லிங்கன் என்டு பெயர் மாற்றினாலும் கடைபெயற்பலகையிலிருப்பதோ லிங்கம் என்டு தான்) 
சரி சரி நேரமாயிடுச்சு போலதெரியுது வீட்ட போவமா ? ? நல்லுர் படம் போடவில்லை எண்டு கோவிக்காதேங்கோ . . . .
3 பின்னூட்டம்(கள்):
நன்றி
கந்தன் அருள் காசினி
எங்கும் பரவட்டும்
கருணையால் அனைவர்
மனதினையும் நிறைக்கட்டும்.
நல்லூர் கந்தனுக்கு அரோகரா!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!
வணக்கம் அனாமியாரே வருகைக்கு நன்றிகள்
Post a Comment