இலங்கை கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி

கடந்த சனிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு மயூராபதி அம்மன் ஆலய இரதபவனி இடம்பெற்றது இரதபவனியைத்தொடர்ந்து கற்பூரச்சட்டி எடுப்போர்,காவடி எடுப்போர் மற்றும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அணிவகுத்துச்சென்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது அது தொடர்பான புகைப்படங்களை இங்கே தருகிறேன்






















12 பின்னூட்டம்(கள்):

Anonymous said...

thanks

said...

Thanks a lot.

said...

கொழும்பில் ஆடி வேல் ரதம் தவிர ஏனையவை பற்றி அறியேன். இது இந்த பதட்டமான காலத்தில் மிக ஆச்சரியமாகவும் இருக்கிறது.
படங்களுக்கு மிக்க நன்றி!
இந்த பறவைக் காவடியெல்லாம் தேவையற்றவை என்பது என் அபிப்பிராயம்.

said...

இந்த பறவைக் காவடியெல்லாம் தேவையற்றவை என்பது என் அபிப்பிராயம்

நானும் இதை ஆமோதிக்கிறேன்

நன்றி உங்கள் வரவுகளுக்கு:)

said...

மிக்க நன்றிகள் மாயா, கண்குளிரக் கண்டேன்

said...

படங்களுக்கு மிக்க நன்றி மாயா. மயூராபதி அம்மன் என்றால் எந்த அம்மன்? இதுவரை நான் கேள்விப்படாத பெயராக இருக்கிறது.

said...

நன்றி கானா அண்ணா

குமரன் இதோ தலவரலாறு

இன்று கொழும்பு மாநகரில் சைவமும் தமிழும் தழைத்தோங்கவும் கலியுகத்தில் தொழுவார் துன்பம் துடைக்கும் தூய அம்பிகை வீற்றிருக்கும் ஆலயமே மயூரபதி ஷ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம். ஆதியில் இவ்வாலயம் மிகவும் சிறிதாக இருந்து நாளடைவில் இது வளர்ந்து இன்று மாபெரும் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு ஒரு பெரும் ஆலயமாக ஈழத்தில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயர் பெற்று விளங்குகின்றது. இன்று 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவத்தை கொண்டாடும் தருணத்தில் இவ்வாலயமானது ஹஆல்போல தழைத்து அறுகுபோல் வேரூன்றி' நிற்பதற்குக் காரணமாக அமைந்தவர் இவ்வாலயத்தின் அறங்காவலர் பொன். வல்லிபுரம் என்றால் மிகையாகாது

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரில் ஹமயூரா இடம்' என்ற இடத்தில் ஆங்கிலேய ஆட்சியில் ஓர் நெசவாலை (Wellawatte Spinning & Weaving mills) உருவானது. இத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காகத் தமிழ்நாடுஇ கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு குடிமனைகள் அமைக்கப்பட்டு அமர்த்தப்பட்டார்கள். அவர்களின் வழிபாட்டிற்காக ஓர் அவை ஒதுக்கப்பட்டு வரதராஜப் பெருமாள் ஆலயம் என்று பெயரிடப்பட்டு வழிபாடுஇ பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1977 தொடக்கம் 1980 வரையில் மண்டபத்திலே நடைபெற்றுக்கொண்டிருந்த வழிபாடு அருகில் இருந்த அரச மரத்தடிக்கு மாற்றப்பட்டது. இரு அரசமரங்களுக்கிடையில் ஓர் வேப்பமரமும் இருந்ததைக் கண்ட அடியார்கள் ஓர் சூலத்தை நிறுத்தி அன்னை காளி அம்மனாக வழிபடத் தொடங்கினர். ஓர் தகரக் கொட்டிலும் அமைக்கப்பட்டு அன்னையை வழிபட்டு வந்தனர்.சில காலம் செல்ல 1985 ஆம் ஆண்டில் அந்த இடத்திலே ஆலயம் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலரின் மனதில் உதிக்க ஓர் ஆலயம் உருவாக்கப்பட்டு சுற்றுமதிலும் இ மண்டபமும் எழுப்பப்பட்டது. இக் காலங்களில் செவ்வாய்இ வெள்ளிக்கிழமைகளில் பூசையும் சிவராத்திரிஇ நவராத்திரிஇ திருவெம்பாவை காலங்களில் விஷேட ஆராதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இப்படியாக வளர்ந்து வரும் காலத்தில் 1987 ஆம் ஆண்டு ஆனி மாதம் அறங்காவலர் பொன். வல்லிபுரம் அம்பாளின் அழைப்பை ஏற்று ஆலயத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது கும்பாபிஷேகத்துக்கு நாள் நியமிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். ஆனால்இ மூர்த்திகள் மகாபலிபுரத்திலிருந்து வந்து சேரவில்லை. கும்பாபிஷேகம் செய்வதற்கு குருக்களுமில்லை என்று வேதனைப்பட்டார்கள்.

அதை உணர்ந்த பொன். வல்லிபுரம் முன்னாள் இந்துகலாசார அமைச்சர் செல்லையா இராசதுரையின் உதவியினால் விக்கிரகங்கள் எல்லாம் தருவிக்கப்பட்டன. மேலும் கப்பித்தாவத்தை பாலசெல்வ விநாயகமூர்த்தி ஆலயம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகரத்தின சர்மா அனுசரணையுடன் பிரதிஷ்டா சிரோன்மணி சாமி விஸ்வநாதகுருக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்வந்தார்கள். கார்த்திகை மாதம் பூர்வபட்ச உத்தராட நட்சத்திரத்திலே 25.11.1987 புதன்கிழமை மிகவும் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு அம்பாளின் உற்சவமூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் ஸ்ரீ சிவபாலயோகி சுவாமிகளும் ஆலயத்திற்கு விஜயம் செய்து ஆசீர்வதித்தார்கள். இவ்வாண்டிலேதான் சிறார்களுக்காக அறநெறிப்பாடசாலையும் நடனப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. 1988 இல் இருந்து இன்று வரை ஆடிப்பூர இலட்சார்ச்சனையும் பௌர்ணமித் திருவிழாவும் தங்கு தடையின்றிச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

கொழும்பு மயூராபதி அம்மன் எண்ணற்ற மக்களுக்குப் பாதுகாப்பையும் அருளையும் வாரி வழங்குகிறாள் என்பதற்கு இவ்வாலயத்தில் அலைமோதும் பக்தர்களின் கூட்டமே சாட்சி. இங்கு சாதிஇ மதஇ இனபேதங்கள் ஒன்றும் கிடையாது. அனைவரும் அவளது குழந்தைகள். சாந்தியும் இ ஒற்றுமையும் சமாதானமும் இங்கு இயல்பாக மலர்ந்து நிற்கின்றது.

said...

மாயா படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி.

//இந்த பறவைக் காவடியெல்லாம் தேவையற்றவை என்பது என் அபிப்பிராயம்.//


யோகன் அண்ணா பறவை காவாடி புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறது.
கனடா கந்தசாமி கோயில் தேரில் எடுத்த படங்களுடன் விரைவில் பதிவிடுகிறேன்.


மாயா மயூராபதி அம்மன் கோயிலுக்கு நானும் போய் இருக்கிறேன். மிக சிறிய இடத்தில் அழகாக அமைத்திருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள குருக்கள்/ ஐயர் ஒருவர் பக்தர்களின் தோற்றம் (வசதியானவர்/ வசதியற்றவர்), கையில் இருக்கும் தட்சணைக்கு ஏற்றால் போல தான் அர்ச்சனைகள் செய்வார், பிரசாதங்கள் கொடுப்பார். அதை நினைத்தால் கோயிலுக்கு போக மனம் வராது.

said...

ஆம் சரியாகச்சொன்னீர்கள் அந்தக்கோவில் ஓர் Fashion Shop போலிருக்கும் அங்கே போனால்
சுவாமி கும்பிட மனமிருக்காது

என்ன செய்யிறது எல்லாம் காசு செய்யிற வேலை ??????அதை நினைத்தால் கோயிலுக்கு போக மனம் வராது.

Anonymous said...

Thamilukaaga uyir kodukkalaam? thanathu samayam(religion) kaaga oruvan thannai varuththa koodaathaa?
enna kodumai Saravanan ithu?

said...
This comment has been removed by the author.
said...

தமிழ் சமயம் மீதுள்ள நம்பிக்கை வேறு மூடநம்பிக்கை வேறு . . .