நல்லூருக்குப்போகலாமா . . [ பாகம் 1 ]

நல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது

வருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் 12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.

கானாபிரபா அண்ணா 25 நாளும் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பைப்பற்றி எழுத ஆரம்பித்து முருகன் அருளால் நன்றாகப்போகுது இதே நேரத்தில் கடந்த இரண்டு வருடங்களின்முன் நடைபெற்ற திருவிழாப்படங்கள் கொஞ்சம் என்னட்டக்கிடக்கு அவற்றை இத்திருவிழா நடைபெறும் காலங்களில் பதிவேற்றலாமென எண்ணியுள்ளேன் கனநேரம் கதைச்சிட்டம் போல கிடக்கு அப்ப கோவிலுக்குப்போவமா

இது முதல்தொகுதி படங்கள்
இவையாவும் 2005ம் ஆண்டு திருவிழாவில் எடுக்கப்பட்டவை






2 பின்னூட்டம்(கள்):

said...

கலக்கல், குறிப்பா மூன்றாவதும், ஐந்தாவதும்.

கடைசிப் படத்தைச் சிறிதாக்கிப் போட்டால் தெளிவாகத் தெரியும்.

said...

நன்றி கானா அண்ணா

இனிவரும் காலங்களில்
திருத்துகிறேன்